கோவை புதூர், காந்திநகர், என்.பிளாக்கில் வசிப்பவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சூர்யா (வயது 22) இவருக்கு 31-1- 20 25 அன்று வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பிரபல ஓட்டல் -ரெஸ்டாரன்ட் நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய சூர்யா பல்வேறு தவணைகளில் அந்த நபர் குறிப்பிட்ட முகவரிக்கு ரூ.8 லட்சத்து 35 ஆயிரத்து 665 அனுப்பி வைத்தார். பல மாதங்களாகியும் லாபம் எதுவும் வரவில்லை. பின்னர் அந்த எண்ணுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சூர்யா கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
அதிக லாபம் தருவதாக கோவை வாலிபரிடம் ரூ.8.35 லட்சம் ஆன்லைன் மோசடி..!
