கோவை கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா சப்ளை – 3 பேர் கைது..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. ‘இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து,சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் நேற்று சுண்டக்காமுத்தூர் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குமறைவான இடத்தில் நின்று கஞ்சா விற்றதாக சுண்டக்கா முத்தூர் அண்ணாநகரை சேர்ந்த நதிஷ்குமார் (வயது 30 )வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கஜேந்திரன் ( வயது 36) கோவை கணபதி சின்னச்சாமி நகரை சேர்ந்த யுவராஜ் ( வயது 38)ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா , ரூ.4,400 பணமும், 3 சக்கர வாகனம், 3 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.