புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல வரவேற்பு..!

புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு மாநில அதிமுக துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ, வையாபுரி மணிகண்டன் தலைமையில் நடந்தது

புதுச்சேரி : புதுச்சேரி வழியாக கடலூர் சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக கடலூர் மாவட்டம் கனமழையால் சீர்குலைந்தது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் ஆசியோடு, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர், எடப்பாடியார் கடலூர் மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் இன்று 16.11.2022 காலை 7 மணியளவில் புதன்கிழமை புதுச்சேரி வழியாக சென்றார். எடப்பாடியார்-க்கு புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ .வையாபுரி மணிகண்டன் தலைமையில் கழகத்தினர் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை கருவடிகுப்பம் சித்தானந்தர் சுவாமி கோவில் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாநில கழக நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், உதயசூரியன், மோகன், முருகேசன், விஸ்வநாதன், அந்துவான், கண்ணன், மண்ணாங்கட்டி, முனியாண்டி, கார்த்திக், வினோத்குமார், பிரபா, எத்திராஜ், முரளிதரன் மற்றும் அதிமுக மேற்கு மாநில கழக நிர்வாகிகள் மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன் தொகுதி செயலாளர்கள் மணி, தர்மலிங்கம், கோபால், இளைஞர் அணி இணை செயலாளர் கன்னியப்பன், வார்டு கழக செயலாளர் பரமசிவம், இளைஞர் பாசறை துணை செயலாளர் அஜய் உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.