திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தல் 3 இளைஞர்கள் கைது – 28 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் போலீஸார் காத்திருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த பேருந்தில் வந்த இளைஞர் ஒருவரை மடக்கி பிடித்த போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் சுமார் 28 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டங்களும், ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
அவற்றை எடுத்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சாவை விற்பனைக்காக கொடுத்து அனுப்பிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்மராஜ் மற்றும் சதீஸ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply