சிறுவாணியில் கன மழைக்கு வாய்ப்பில்லை-போளுவாம்பட்டி வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு..!

கோவை போளுவாம்பட்டி வனச்சரக பகுதியில் உள்ள சிறுவாணி வனப்பகுதியில், இரண்டாவது வாரம் வரை கன மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிறுவாணி அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இம்மாத துவக்கத்தில் இருந்தே கன மழை பெய்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக, 100 மி.மீ.க்கு அதிகமாக மழை பெய்ததால், நீர் மட்டம் அதி அதிகரித்தது.இந்த நிலையில் நேற்று, 26 மி.மீ.பெய்ததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 38.38 அடியாக மட்டம் அதிகரித்தது, குடிநீர் தேவைக்காக, 10.49 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது இது குறித்து, போளுவாம்பட்டி பகுதியில் வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியதாவது இனி, இம்மாத இறுதி வரை வெப்பச்சலன மழையே பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதுவும், கோவையின் வடக்கு பகுதிகளான துடியலுார், அன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்யக்கூடும். மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள, சிறுவாணி வனப்பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறி இல்லை இரண்டாவது வாரத்தில் துவங்கி, கடைசி வரை, தென்மேற்கு பருவ மழை மீண்டும் பெய்து, நீர் மட்டம் மேலும் உயரும். அப்போது, கன மழை பெய்ய வாய்ப்புண்டு. இவ்வாறு அவர் கூறினார்