கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் பெட்ரோல் பங்கில் புகுந்து மேனேஜரை கொல்ல முயற்சி- 8 பேர் கொண்ட கும்பல் கைது..!!

கோவை :கோவை சுங்கம் சிவராம் நகரை சேர்ந்தவர் நவாஸ் கான்.இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் கோவை பெரிய கடை வீதியில் உள்ளது.இதில் மேனேஜராக பணிபுரிந்து வருபவர் சர்புதீன் (வயது 54) இவர் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருந்த போது அதே வங்கியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரும் மற்றொரு சர்புதீன் ( வயது 51) என்பவர் பணத் தகராறு காரணமாக 8 பேர் கொண்ட கும்பலுடன் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பங்கில் புகுந்தார். அங்கிருந்த மேனேஜர் சர்புதீனடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.மேனேஜர் சத்தம் போடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.அதற்குள் அந்த கும்பல் ஆட்டோவில் ஏறி தப்பி ஓடிவிட்டது.இது குறித்து மேனேஜர் சர்புதீன் உக்கடம் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.இது தொடர்பாக பங்க் ஊழியர் சர்புதீன் (வயது 51) உக்கடம் லாரி பேட்டை அகமத் கபீர் ( வயது 38 )கரும்புக்கடை சுபையர் (வயது 46) கோட்டைமேடு முகமது அலி ( வயது 39 )தெற்கு உக்கடம் அப்பாஸ் (வயது 40) ஆத்து பாலம் என்.பி. இட்டேரி பைசல் ரகுமான் (வயது 35) சாரமேடு ராஜ்குமார் (வயது 45)லாரி பேட்டை நவாஸ் (வயது 35 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.