நிலத்தகராறில் தாய்- மகளுக்கு கத்திக் குத்து -உறவினர் கைது..!

கோவை: கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு விவேகானந்தர் விதியை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவரது மனைவி சுலோச்சனா (வயது 50)இவர்களது மகள் மணிமேகலை ( வயது 25)இவர்களும் சுலோச்சனாவின் அக்கா மகன் அய்யப்பன் (வயது 46)இருவரும் அருகருகே வசித்து வருகிறார்கள்.இவர்களுக்குள் 5 ஏக்கர் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது .இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் சுலோச்சனாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த நிலையில் ஆத்திரமடைந்த ஐயப்பன் கத்தியால் சுலோச்சனாவையும், அவரது மகள் மணிமேகலையும் குத்தினார் .இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கிணத்துக்கடவு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது குறித்து சுலோச்சனா கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஐயப்பன் மீது கொலை முயற்சி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..