ஐந்நூறு ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு: இந்து முன்னணி கண்டனம் – கோவையில் பரபரப்பு !!!

ஐந்நூறு ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு: இந்து முன்னணி கண்டனம் – கோவையில் பரபரப்பு !!!

கோவை மத்துவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நல்லூர்வயல்பதி மக்கள் வழிபடும் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. கடந்த 22 ஆம் தேதி அந்த கோவிலுக்குள் இருந்த கருப்பராயன் சிலை மாயமாகி உள்ளது.

இது சமூக விரோதிகள் சிலரால் நடந்து இருக்கலாம் என இந்து முன்னணி சந்தேகம் தெரிவித்துள்ளனர்.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியை மறித்து காருண்யா நிர்வாகத்தால் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டது. நல்லூர்வயல்பதி மக்களின் போராட்டத்தினால் இந்த பிரச்சனை RTO விசாரணை வரை சென்று கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வழி ஏற்படுத்தி தரப்பட்டது.

அன்று முதல் இன்று வரை இக்கோவில் மூன்று முறை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஒன்பது மாதத்திற்கு முன்பு இக்கோவிலின் மேற்கூரை அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது. ஆறு மாதத்திற்கு முன்பு அக்கோவிலில் உள்ள அம்மன் திருமேனியின் மூக்கு உடைக்கப்பட்டது.

இது சம்மந்தமாக காவல் நிலையத்தில் பக்தர்கள் புகார் அளித்த பொழுது மனநோயாளி ஒருவன் இதை செய்ததாக காவல்துறை கூறியது.

இப்பொழுது மூன்றாவது முறையாக சுமார் நூறு கிலோ எடையுள்ள கருப்பராயன் சிலை கடத்தப்பட்டுள்ளது.

இதற்கு பின்னனியில் மதமாற்ற கும்பல் இருக்கலாம் என இந்து முன்னணி சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

கருப்பராயன் சிலை திருடிய சென்ற சமூக விரோதிகளை காவல் துறை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான வழப்குப் பதிவு செய்ய வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C .சுப்ரமணியம் தெரிவித்தார்.