அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து: ரூ .20,000/- அபராதம் முதல்வர் நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் – உரிமையாளருக்கு கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு !!!

அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து: ரூ .20,000/- அபராதம் முதல்வர் நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் – உரிமையாளருக்கு கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு !!!

கோவையில் அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தும் அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆண்டு நா.லோகு என்பவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து காளப்பட்டி செல்வதற்கு காத்திருந்த போது உக்கடத்தில் இருந்து கணபதி சவணம்பட்டி வழியாக காளப்பட்டி வரை செல்லும் தனியார் பேருந்து காந்திபுரம் வந்தபொழுது அப்பேருந்தில் ஏறி நடத்துனரிடம் காளப்பட்டி செல்ல டிக்கெட் கேட்ட போது காளப்பட்டி வரை செல்லாது சரவணமபட்டி வரை மட்டுமே செல்லும் என கூறியுள்ளார். அதற்கு அவர் காளபட்டி வரை செல்ல வழித் தட அனுமதி இருக்கும் போது சரவணம்பட்டி வரை மட்டுமே இயக்குவது தவறு என் கூறியும் நடத்துனர். காளப்பட்டி வரை ஓட்ட முடியாது என கூறி வாக்குவாதம் செய்து சரவணம்பட்டி வரை கூடுதல் கட்டணம்

வசூலித்ததோடு சரவணம்பட்டியில் அனைத்து பயணிகளையும் இறக்கி விட்டனர். அதன் பின் காளப்பட்டி செல்வதற்கு ஆட்டோவில் பயணம் செய்து உள்ளார் இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் இது தொடர்பாக பேருந்து டிக்கெட் இணைத்து சென்னையிலுள்ள போக்குவரத்து ஆணையர், மாவட்ட ஆட்சியர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளித்தார். அதன்படி போக்குவரத்து அதிகாரிகள் இப்பேருந்து இயக்குவதை கண்காணித்த போது காளப்பட்டி வரை இயக்கப்படாதது கண்டு அறிந்து அப்பேருந்து அபராதம் விதித்தனர். ஆனாலும் தொடர்ந்து காளப்பட்டி வரை இயக்காததால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பேருந்தின் அனுமதி தற்காலிக ரத்து செய்யப்பட்டது. மேலும் காளப்பட்டி வரை இயக்காமல் சரவணம்பட்டியில் இறக்கி விடபட்டதால் ஏற்பட்ட மன உளைச் சலுக்கும் சேவை குறைபாடுகளுக்கு உரிய இழப்பீடு கோரியும் இழப்பீடு தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும் படி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். இதில் எதிர்தரப்பினரகளாக போக்குவரத்து ஆணையர், மாவட்ட துணை ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர் . இவ்வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற ஆணைய தீர்ப்பில் மனுதாரர் அளித்த புகார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அளித்த பதில் மனுவினை ஆய்வு செய்த போது வழித் தட எண் 24 போக்குவரத்து துறையால் அனுமதிக்கபட்ட வழித் தடம் காளப்பட்டி வரை இயக்காதது உறுதி செய்யப்பட்டது. இதனால் இப்பேருந்து உரிமையாளர் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.