திருவள்ளுவர் தினத்தில் தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளுக்கு அபராதம்..!

கோவை : மகாவீர்ஜெயந்தி ,திருவள்ளுவர் தினம் வள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. இந்த நாட்களில் கடைகள் திறந்து இருந்தால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்பது வாடிக்கை. இந்த நிலையில் திருவள்ளூர் தினமான நேற்று கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் வ ,உ. சி. உயிரியல் பூங்கா இயக்குனர் சரவணன் தலைமையில் கவுண்டம்பாளையம் பி.என்.புதூர் வடவள்ளி , சீரநாயக்கன்பாளையம் கவுண்டம்பாளையம், காந்தி பார்க் உட்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அனுமதி இல்லாமல் திறந்து வைத்திருந்த 3 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அங்கிருந்த 15 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.