ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் : காங்கிரஸுக்கு ஒதுக்கீடு- முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு..!

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோதலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோதலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அறிவிப்பை அந்தக் கூட்டணி சாா்பில் திமுக தலைமை வியாழக்கிழமை வெளியிட்டது. இதுதொடா்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோதலையொட்டி, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவா்களுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்து பேசினாா். ஏற்கெனவே, கடந்த சட்டப் பேரவைத் தேர் தலில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற காரணத்தால், தற்போதைய இடைத் தோதலிலும் அந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவா்கள் சந்திப்பு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் திருமகன் ஈவெரா அண்மையில் மறைந்ததையடுத்து, இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27-இல் இடைத் தோதல் நடைபெறவுள்ளது.

இத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடப் போகும் கட்சி எது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவா்கள் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவா்கள் திருநாவுக்கரசா், ஈவிகேஎஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோா் உடனிருந்தனா். வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்-கே.எஸ்.அழகிரி: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திமுக தலைமையுடனான பேச்சு சுமுகமாக இருந்தது. காங்கிரஸ் சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா் யாா் என்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்றாா் அவா்.