சூலூரில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை..

கோவை சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பார்வதி வயது 61இவர் கடந்த ஒரு ஆண்டுகளாக முதுகுதண்டுவடம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த ‘பார்வதி நேற்று அங்குள்ள மலைப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகன் குமாரசாமி சுல்தான் பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.