சீன மொபைல் போன்களை பயன்படுத்தாதீர் – ராணுவ வீரர்கள், குடும்பத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை..!

ந்திய ராணுவ வீரர்கள், சீன மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்று, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவுஅறிவுறுத்தி உள்ளது..

இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளேவே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், முப்படைகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சீன போன்களை பயன்படுத்துவதால், பாதுகாப்பு ரீதியாக பிரச்சனை ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு இதுகுறித்து ராணுவ வீரர்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கி உள்ளது.. அதில், சீன மொபைல் போன்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சீன போன்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ராணுவ வீரர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சீன தொலைபேசிகளை வாங்குவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடுக்க வேண்டும் அந்தந்த படைப்பிரிவு அதிகாரிகளை என்று கேட்டுக் கொண்டுள்ளது. சீன மொபைல் போன்களில் ஸ்பைவேர் மற்றும் மால்வேர் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் Vivo, Oppo, Xiaomi, One Plus, Honor, Real Me, ZTE, Gionee, ASUS மற்றும் Infinix உள்ளிட்ட சீன போன்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சீன மொபைல் போன் செயலிகள் குறித்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பல செயலிகள் இராணுவ வீரர்களின் தொலைபேசிகளில் இருந்து நீக்கப்பட்டன. சீன மொபைல் போன்கள் மற்றும் சீன செயலிகளின் பயன்பாடும் பாதுகாப்புப் படைகளால் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..