மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திமுக அரசின் திட்டம் வரவேற்கக்கூடியது – அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ..!

ழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை அதிமுக முன்னாள் முதல்வரும், அ திமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். ரோப்கார் மூலம் மலைக்கு வந்த அவர் சாயரட்சையில் கலந்து கொண்டு சுவாமியை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்தார்.

பின்னர் தங்கத்தேருக்கும் பணம் செலுத்தி வடம் பிடித்து இழுத்து வழிபட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை ரவீந்திரநாத் சந்தித்தார். அப்போது, தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதுமைப் பெண் திட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தவர், “அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, லேப்டாப், 25, 000 திருமண உதவித்தொகை என பல திட்டங்களை கொண்டு வந்தது. அதே வழியில் திமுக அரசு கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய திட்டம் கொண்டு வந்துள்ளது. இது வரவேற்கக்கூடியது” என தெரிவித்தார்.

மேலும், ஒற்றைத் தலைமை குறித்த வழக்கு தொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளர் உச்சநீதி மன்றத்தை நாட வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதை அவரே தெரிவிப்பார் என்றார். டிடிவி தினகரனுடன் இணைந்து பயணிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், ” கழகத்தில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வரும் தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியும்” என தெரிவித்துள்ளார்.