கோவையில் 4 புதிய போலீஸ் நிலையங்கள் – காவலர் சிறுவர்கள் பூங்கா- டிஜிபி சைலேந்திரபாபு இன்று திறந்து வைத்தார்..!

கோவை மாநகரில் 15 சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இது தவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் , 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500 போலீசார் பணிபுரிகிறார்கள் கோவை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கை போதாது என்றும் கூடுதல் போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை அடுத்து தமிழக முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் கோவை மாநகருக்கு சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம்,தெற்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையம் ஆகிய புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார் . இதையடுத்து இந்த போலீஸ் நிலையங்களுக்கான இடம் தேர்வு செய்யும் பணி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் 4போலீஸ் நிலையங்களுக்கு தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்படும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டது .தேர்வு செய்யப்பட்ட கட்டிடங்களில் ,இன்ஸ்பெக்டர்கள்,சப் இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர் அறை, கூட்ட அரங்கு, ஆயுதங்கள் வைத்திருக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வந்தது. மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தல 25 போலீசார் வீதம் மொத்தம் 75 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிய காவல் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் ,சப் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து மேற்கண்ட 4 போலீஸ் நிலையங்களின் திறப்பு விழா இன்று நடந்தது. தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி .சைலேந்திரபாபு 4 போலீஸ் நிலையங்களையும் திறந்து வைத்தார்.கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிகாரிகள் குடியிருப்பு அருகே போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முயற்சியால் சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.பின்னர் அங்கு மரக்கன்றுகள் நாட்டினார்.காவலர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இதையடுத்து மாநகர நூண்ணறிவு போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் தாங்கள் சேகரிக்கும் பிரத்யேக தகவல்களை பதிவு செய்ய வசதியாக “ஆக்டோபஸ் ” எனும் புதிய மென்பொருளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் கலவரதடுப்பு அதிவிரைவு படைடிரோன் :செயல்பாடுகளை நேரில்கண்டறிந்தார். ரோந்து பணிக்கு
பயன்படுத்தக்கூடிய ஆட்டோ” பட்ரோல்” வாகனத்தை டி.ஜி.பி.சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். சிறந்த சேவை புரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.திருட்டுப் போய் மீட்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்தார்.போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண் காவலர்கள்,வாகனங்கள் இயக்கும் பெண் போலீ சார் போலீஸ் துப்பறியும் படையில் இடம்பெற்றுள்ள பெண் காவலர்களிடம் கலந்துரையாடி,பாராட்டு தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,துணை போலீஸ் கமிஷனர்கள் சுகாசினி சண்முகம் ,சந்தீஸ், மதிவாணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.