முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு – பைக் ஆசாமி கைவரிசை..!

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ரவி .இவர் இறந்துவிட்டார் .இவரது மனைவி ராஜலெட்சுமி ( வயது 67 )இவர் நேற்று கே. கே. புதூர் .அம்மாசை வீதியில் நடந்து சென்றார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி இவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அருகில் சென்று அவர் அணிந்திருந்த 4 பவுன தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து ராஜலட்சுமி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.