பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர்… தட்டி கேட்ட கணவர், மனைவிக்கு அடி உதை.!!

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் சந்திரன் .இவரது மனைவி ரம்பா (வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். இதை அதே பகுதியில் வசிக்கும் சத்தியநாராயணன் என்பவர் வீடியோ எடுத்தாராம்.இதைப் பார்த்த ரம்பா சத்தம் போட்டார். உடனே சத்திய நாராயணன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தனது கணவரிடம் ரம்பா கூறினார் .அவரது கணவர் சத்தியநாராயணனிடம் கேட்டபோது ஆத்திரமடைந்து கணவர் சந்திரனை தாக்கினாராம். பின்னர் அவரது மனைவி ரம்பாவையும் தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது .இதுகுறித்து ரம்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சத்திய நாராயணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,தாக்குதல் உட்பட3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.