உயிருக்கே ஆபத்து… இனி ட்ரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் ஜெயில்.!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், டெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்டில் கொடுக்கப்பட்ட ட்ரை ஐஸ் கலந்த உணவைச் சாப்பிட்ட 5 நபர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இரண்டு நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகத் தெரிய வந்ததுள்ளது.

ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா போன்ற பெயர்களில் சாப்பிடும் பொருட்களாக விற்பனை செய்யும் இவை திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படுகின்றன எனவும் இவை ஆய்வுக் கூடங்களில் உள்ள பொருட்களை மிகவும் குளிர்ச்சியான சூழலில் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் லிக்விட் எனவும் குறிப்பிடுன்னார்.

மேலும் இது ரூம் டெம்ரேச்சரில் வாயுவாக மாறும் தன்மை கொண்டது.இதைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களால் உயிரிழப்பு ஏற்படும், மேலும் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாய் சிதைவு ஏற்படும் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்குக் கண் பார்வை, பேச்சு பறிபோதல், உயிரிழப்பு என ஏதும் நேரலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனவே திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை யாரும் விற்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதை மீறி டிரை ஐஸை உணவுக்குப் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவவிட்டுள்ளனர்.