தொடரும் இழுபறி… பெருமான்மையுடன் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதில் இடியாப்ப சிக்கல்..!

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவிக்கு சிவகுமார், சித்தராமையா ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என காங்கிரசுக்கு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. முடிவு எடுக்க முடியாமல் அக்கட்சி மேலிடம் திணறுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா என மும்முனைப் போட்டியால் பெரும் குழப்பம் துவங்கி உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், காங்கிரசுக்கே உள்ள கோஷ்டிப் பூசல் குணத்தால், முதல்வர் பதவியில் அமர, இரண்டு பேர் போட்டி போடுவதும், அதற்கு அவர்களது ஆதரவாளர்கள் துாபம் போடுவதும், பிரச்னையைத் தீர்க்க, கர்நாடகாவைச் சேர்ந்த, காங்., தேசிய தலைவர் கார்கேவையே முதல்வராக்கலாமா என்ற யோசனையிலும் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளதால், இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது.
யாரை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்வது என்பது குறித்து, பெங்களூரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் ஆலோசனை நடந்தது. அறிக்கைஇந்த கூட்டத்துக்கு, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டே, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலர் ஜிதேந்திர சிங், முன்னாள் தேசிய பொது செயலர் தீபக் பபாரியா ஆகியோரை பார்வையாளர்களாக, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுப்பி வைத்தார்.முதல்வராக யாரை தேர்வு செய்வது என்ற அதிகாரம் கார்கேவுக்கு விடப்பட்டு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின், அனைவரிடமும் தனித்தனியாக ரகசியமாக கருத்து கேட்கப்பட்டது.அப்போது, சித்தராமையாவுக்கு தான் அதிகமானோர் ஆதரவு தெரிவித்ததாகவும், சிவகுமாருக்கு சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததாகவும், தகவல் வெளியானது. ரகசிய கூட்டம்இந்த பட்டியலை, மூன்று பார்வையாளர்களும் நேற்று மதியம் டில்லி சென்று கார்கேவிடம் சமர்ப்பித்தனர்.

இதற்கிடையில், சித்தராமையா, சிவகுமார் இருவரையும், டில்லி வரும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது.சித்தராமையா தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள் பத்துக்கும் மேற்பட்டோருடன் சிறப்பு விமானம் மூலம் டில்லி சென்றார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆனால், சிவகுமார் மட்டும் டில்லி செல்லவில்லை. அவருக்கு பிறந்த நாள் என்பதால், கோவில்கள், மடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.டில்லி வரும்படி மீண்டும் மேலிடம் அழைத்தது.

இதையடுத்து, நேற்று இரவு 7:30 மணிக்கு புறப்பட ‘ஏர் இந்தியா’ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இறுதி கட்டத்தில் ‘வயிற்று வலி’ எனக் கூறி டில்லி பயணம் ரத்து செய்தார். ‘ஆல் தி பெஸ்ட், குட் லக்’பெங்களூரில் சிவகுமார் கூறியதாவது:சித்தராமையாவுக்கு ஆதரவு எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவருக்கு வாழ்த்துகள். ‘ஆல் தி பெஸ்ட், ‘குட் லக்!’ நான் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன்.

யாருக்கும் மிரட்டல் விட மாட்டேன். எனக்கு தொலைதுார கண்ணோட்டம் உள்ளது.நான் கட்சிக்கு நேர்மையாக இருப்பேன். சூழ்ச்சிக்கு பலியாக மாட்டேன். என் மீது நம்பிக்கை இருப்பதாக சோனியா கூறினார்.

அதன்படி இங்கேயே இருந்து என் பணியை செய்கிறேன்.ஆனால், பொதுவான நன்றியுணர்வும், மரியாதையும் இருக்க வேண்டும். வெற்றிக்கு பின்னால் யார் இருக்கின்றனர் என்பதை மரியாதையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.என்னை தலைவராக நியமித்த போது, கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவேன் என சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கேவிடம் உறுதி அளித்தேன். நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி உள்ளேன்.எனக்கு ஆதரவாக யாரும் வேண்டாம். நான் தனி நபர்.

135 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை உருவாக்கி உள்ளேன்.எனக்கு ஏதோ தொற்று உள்ளது. வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. மருத்துவர்கள் வருகின்றனர். என்னை விட்டு விடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

மும்முனை போட்டிஇவர்கள் இருவர் ஒரு பக்கம் இருக்க, கார்கேவும் முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எஸ்.சி., கோட்டாவின் கீழ் தனக்கு வழங்கும்படி கட்சி மேலிட தலைவர்களுக்கு திரைமறைவில் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.அவருக்கு ஆதரவாக எஸ்.சி., சமுதாயத்தினர் பெங்களூரு, கலபுரகி உட்பட பல பகுதிகளில் நேற்று தர்ணா நடத்தினர். காங்கிரசில் பல ஆண்டுகளாக எஸ்.சி., தலைவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. எனவே இம்முறை பதவி தந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.மூன்று தலைவர்களும் ஒரு பதவிக்கு ஆசைப்படுவதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.சித்தராமையா, சிவகுமார் ஆகியோருக்கு ஆதரவாக தனி தனியாக அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுதும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.’கேக்’ ஊட்டிய சித்துபெங்களூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. சிவகுமாரின் 63வது பிறந்த நாளை ஒட்டி, ‘கேக்’ வெட்டப்பட்டது. அப்போது, சித்தராமையா கேக் ஊட்டினார்; பதிலுக்கு சிவகுமாரும் கேக் ஊட்டினர். உடனிருந்த தலைவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்..