கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் பத்ரி நாராயணன். இவர் கோவை மாவட்டபயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக டாக்டர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன் திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.இவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முழு கவனம் செலுத்தப்படும்.பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும்.விபத்து உயிர் பலியை தடுக்க மாவட்ட முழுவதும் உள்ள முக்கிய இடங்களை ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் நேரில்சென்று ஆய்வு செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply