மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,778 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,778 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருவதால் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,701 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,778 கன அடியாக அதிகரித்து உள்ளது. புதன்கிழமை காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 90 0கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.80 அடியாகவும், நீர் இருப்பு 91.56 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. மழையளவு: 40.20 மி.மீ பதிவாகியுள்ளது.
Leave a Reply