கோவையில் 200 போதை மாத்திரைகள்,ரூ.37 ஆயிரம் பறிமுதல்- கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது..!

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று இரவு சாய்பாபா காலனி ,அழகேசன் ரோட்டில் ரோந்துசுற்றி வந்தனர் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 200 போதை மாத்திரைகள், பணம்ரு 37 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும்கைதுசெய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கோவை வெங்கடாபுரம் நேதாஜி காலணியை சேர்ந்த தேவராஜ் மகன் சஞ்சய் ( வயது 19) கவுண்டம்பாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஜானகிராமன் ( வயது 26) கணபதி கணேஷ் லேஅவுட் 2 -வது வீதியைச் சேர்ந்த தனபால் மகன் செல்வகுமார் (வயது 27)என்பது தெரியவந்தது .இவர்களில் சஞ்சய் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ( ஐ.டி)மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.