பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்… பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.!!

ழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!!

பழங்குடி மக்கள் மீது அதிக அளவில் வன்கொடுமை நடத்தப்பட்டு வருகின்றது.

இது தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்னும் மாவட்டத்தில் நபர் ஒருவர் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது போன்று எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாக வைரலாகி வருகின்றது.

இந்த சம்பவமானது அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.இவ்வாறு மனிதாபிமானம்மற்று நடந்து கொள்ளும் அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த பர்வேஸ் சுக்லா என்பது தெரிய வந்தது.

இவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் எம்எல்ஏவுக்கு மிக நெருக்கமான நபர் என்பதும் தெரியவந்தது.மேலும் இது போன்று கேவலமான செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய பிரதேசத்தில் பழங்குடி மக்கள் மீது நடக்கும் வன்முறைக்கு எதிராக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட அந்த நபரை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அழைத்தார். பின்னர் பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் காலை பாலால் கழுவி மன்னிப்பு கேட்டார்.

மத்திய பிரதேச முதலமைச்சர் பழங்குடி இளைஞரிடம் கூறியது, நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.அந்த வீடியோவை பார்த்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.மக்கள் எனக்கு கடவுளுக்கு சமம் என்று கூறியுள்ளார்.