வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காட்டுயானை கூட்டம்: கோவிலை இடித்து சேதம்-பீதியில் மக்கள்..!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 5 காட்டு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் அக்காமலை எஸ்டேட்டிற்கு உட்பட்ட ஊசிமலை டாப் மக்கள் குடியிருப்புப்பகுதியில் புகுந்து அங்குள்ள கிருஷ்ணன் என்ற தொழிலாளியின் வீட்டின் சுவற்றை இடித்துத் தள்ளி சேதப்படுத்தியுள்ளது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு நீண்ட நேர போராட்டத்திற்கு சத்தம் போட்டு யானைகளை அங்கிருந்து விரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து மீண்டும் காலை 5 மணியளவில் அப்பகுதிக்கு வந்த அந்த காட்டுயானைகள் கூட்டம் அருகே உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை இழுத்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அதற்குள் மற்றொரு பக்கம் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளது .இதை சற்றும் எதிர்பாராத அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் யானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டியுள்ளனர். தற்போது அந்த யானைக்கூட்டம் அருகே உள்ள சூடக்காடு பகுதியில் முகாமிட்டிருப்பதால் இன்று இரவு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் . எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..