கேரளா மாநிலம் ஆலப்புழாவில் வாத்துப் பண்ணையில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து கோவை – கேரளா எல்லை பகுதியில் கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால் கோவையில் உள்ள அனைத்து ...
தென் கொரிய கடல் அருகே நேற்று (2-11-2022) ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசியது வடகொரியா. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மீது இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியிருக்கிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பைத் தாண்டி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த உடையகுளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பொன்னாத்தாள். இவர்களின் மகள் நந்தினி (வயது 21). பழங்குடி மக்களான இவர்கள் பாலக்காடு மாவட்டம் செம்மணாம்பதி அழகாபுரி காலனியில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். அங்கு ஒரு தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நந்தினியின் பெற்றோர் அவருக்கு வரன் பார்க்க தொடங்கினர். ...
கோவை: பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி செல்வநாயகம் (வயது 52).இவர்களது மகன் செந்தில்குமார் (32). செல்வநாயகம் நேற்று வீட்டின் முன்பு நின்று துணிகளை துவைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி அருகில் இருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். வீட்டிற்குள் இருந்த அவரது மகன் செந்தில்குமார் ஏதோ ...
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ்-1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டில் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. 100 சதவீதம் ...
கோவை காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவருக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து ...
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம். குறிப்பாக காட்டு பன்றிகள், காட்டெருமைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ளது. இவை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ ...
காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1,180 கன அடியாக இருந்து வருவதால், ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதுபோல புழல் ஏரியும் இன்று திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து ...
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பாலாற்றில் மையமாக வைத்து ஏராளமான ஏரிகள் இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ளன. பாலாறு படுக்கைக்கு கீழ் வரும் ஏரிகள் காரணமாக, அதிக அளவு விவசாயமும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் ...
தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழக மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ...













