கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 50) இவர் அ.தி.மு.க. 87-வது வார்டு செயலாளராக பதவி வகித்து வந்தார் . நேற்று இவரது வீட்டில் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் இருகூர் ரோடு கிருஷ்ண கவுண்டர் நகரை சேர்ந்தவர் ஞானதுரை. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சோனியா (வயது 24) இவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. செல்சியா ( வயது 6)டேனியல் ராஜா (வயது3) ஆகிய 2குழந்தைகள் உள்ளனர்.கடந்த 21ஆம் தேதி சோனியா தனது ...

கோவையில் தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை சிலர் புகைபடம் எடுத்ததை பார்த்ததாக ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுனர் போலீசாரிடம் தெரிவித்தார். புகைபடம் எடுத்த நபர்களில் ஒருவர் முகமது ஷாரிக்கை போல இருந்ததாகவும் தலையில் குல்லா அணிந்து இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். நியூஸில் முகமதுஷாரிக் தனது வாட்ஸ் அப் DP யில் ஈஷா ...

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ...

பாதுகாக்கப்படுமா ? யானைகளின் உயிர் – வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சியை மலை ஒட்டி அமைந்து இருக்கிறது. உணவுக்காக வன விலங்குகள் அருகிலுள்ள கிராமங்களில் அடிக்கடி வருவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் மனித, விலங்கு மோதல் ஏற்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகளை விரட்டவும், அவற்றை கண்காணிக்கவும் வேட்டை ...

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 ...

பொதுவாக ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு .இதில் முடக்கத்தான் கீரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் . நம்மை ஒரே இடத்தில் வாத நோயால் முடக்காமல் இந்த கீரை காப்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என்று பெயர் வந்தது .குளிர்காலங்களில் வரும் இடுப்பு வலி மூட்டு வலி உடல் வலி, கை ...

கோவை: பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி, வைகை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45) கூலிதொழிலாளி .இவர் நேற்று மதுக்கரை அருகே கோவை- பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ...

கோவை சுல்தான்பேட்டை அடுத்த வதம்பச்சேரி அருகே பி.ஏ.பி கால்வாய் பாலத்தின் அடியில் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அதிகாரி மேகலாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் ...

சூலூர் அருகே திருச்சி சாலையில் ராவத்தூர் பிரிவு அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்ப்பவர் மணிகண்டன் (வயது 30). இவர் சம்பவத்தன்று காலை வழக்கம்போல வேலைக்கு சென்றார். அதன் பின்னர் திடீரென காணாமல் போனார்.இந்நிலையில் அன்று மாலை ராவத்தூர் நொய்யல் பாலம் வழியாக சென்ற பொதுமக்கள் ஆற்றில் ஒருவர் இறந்து ...