வடகிழக்கு பருவமழை இயல்பை விட 91% குறைவு.. தமிழகத்தில் எதிர்பார்த்த மழை வருமா..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

ட கிழக்கு பருவ மழையின் இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர். ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது.

16 மாவட்டத்தில் மழை பெய்யவில்லை, 22 மாவட்டத்தில் இயல்பை விட குறைவான அளவு மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 23 வரையிலும் தமிழகம் புதுவை காரைக்கால் ஆக்கிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொறுத்த வரையிலும் பதிவான மழை அளவு 330 மீ. மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 317 மில்லி மீட்டர் இயல்பை விட 4% அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களின் நிலையை பொறுத்த வரையிலும், குறிப்பாக கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதம் பதிவாகியிருந்த நிலையில் கடந்த வாரம் அது நான்கு சதவீதமாக குறைந்துள்ளது. வெப்பநிலை பொறுத்த வரையிலும் அதிகபட்ச வெப்பநிலையும் குறைந்தபட்ச வெப்ப நிலையும் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இயல்பை ஒட்டி இருந்தது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.