கோவை பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம்

கோவை பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம்

கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அரசு பணியாளர் குடியிருப்பு அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது. மாநகரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் பல லட்சம் மதிப்பிலான பழைய

பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர். மேலும் தீ பரவாமல் பல மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை காட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் கரும் புகைமூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் இது குறித்து போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.