ஸ்ரீஹரிகோட்டோ: 9 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நவம்பர் 26-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து ஓசன்சாட்-3 மற்றும் பூடான் உட்பட எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54/ஈஓஎஸ்-06 விண்ணில் ஏவுகிறது. PSLV-C54 ஏவுதல் முதல் ஏவுதளத்தில் (FLP), SDSC, ...

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்கும்படி அருகில் உள்ள நில உரிமையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட ...

கோவை மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை (நவம்பா் 30) நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 30-ம் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தெற்கு சித்தூரை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி .இவரது மனைவி தமிழரசி(வயது 50) இவர் பெத்தநாயக்கனூரில் உள்ள அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலது காலில் பாம்பு கடித்தது .இவரை சிகிச்சைக்காக அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,முத்து நகரை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது61) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு சென்ட்ரல் ஸ்டுடியோ சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் நந்தகோபால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இது குறித்து ...

சிம் பாக்ஸ் பயன்படுத்திய மூன்று பேரை பிடித்து பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடைபெற்ற வருகிறது. சென்னை அமைந்தகரையில் சட்டவிரோதமாக சிம் பாக்ஸ் கருவியை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் மேற்கொண்ட மூன்று பேரை பிடித்து ஐ.பி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக செல்போன்கள் ...

நாடு முழுவதும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ளன. ஆனாலும், 10 ரூபாய் தாள் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தை பொருத்தவரை சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை பரவலாக யாரும் வாங்குவதில்லை. 10 ரூபாய் ...

அமெரிக்காவில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகரித்துள்ள நிலையில் சில மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பனிக்காலத்தின் தொடக்கத்திலேயே அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நியூயார்க் நகரம் பனிப்பொழிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எரி நகரில் 24 மணி நேரத்திற்குள் 180 செ.மீ ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சந்தே கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52) கூலி தொழிலாளி .குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோடு வெங்கடேசலு நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் ( வயது 34 )இவரும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் பிரிவு ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த கதிர் சர்வேஷ் ( 25 ...