தென்னந்தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள மலை பாம்பு – கோவையில் வனத் துறையினரிடம் ஒப்படைப்பு

தென்னந் தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள மலை பாம்பு – கோவையில் வனத் துறையினரிடம் ஒப்படைப்பு

கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவரது வீட்டின் அருகே உள்ள தென்னை தோப்பிற்குள் சுமார் 12 அடி நீளமுள்ள மலைபாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர்களான WHCT அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மலைப்பாம்மை லாவகமாக பிடித்து மதுக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.