கோவை எம்.என்.ஜி வீதி யை சேர்ந்தவர் முருகன் (வயது 53). தங்க பட்டறை தொழிலாளி. இவரது மகள் ஹேமலதா (வயது 20). இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதற்காக வரன் பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் 23-ந் தேதி காந்தி பார்க்கில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் ...
கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.அப்போது அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எழுந்து செல்ல கூறினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் ...
கோவை மாநகர போலீசில் நிலையங்களில் பணியாற்றி வந்த 15 ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் என மொத்தம் 20 பேர் நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 58). இவர் கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தது. இவர் ...
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்றும் கொட்டிய பனியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிப்பொழிவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், டெக்சாஸ், மெக்சிகோ, நியூயார்க்கின் பஃபேலோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதன் ...
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெடிகுண்டு (BOMB) பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் அந்நாடு முடங்கி உள்ளது. மொத்தம் 18 லட்சம் வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் தினத்திலும் வீடுகளில் அதுவும் இருளில் மூழ்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை போல் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட வளர்ந்த நாடுகளில் ...
புதுடெல்லி: சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி தெரிவித்துள்ளார். மத்திய அறிவியல், தொழில் துறையின் கீழ் சிஎஸ்ஐஆர் அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஹைதராபாத்தில் உள்ள உயிர்மம், ...
சீனாவில் கோவிட் அலை இரண்டு மில்லியன் மக்களை கொல்லக்கூடும் என நிபுணர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். சீனாவில் கடந்த 7ஆம் தேதி அன்று கட்டுப்பாடுகள் வியத்தகு முறையில் தளர்த்தப்பட்டது. தேசிய கோவிட் – 19 அலையுடன் சீனா போராடி வருவதால், நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அவசரகால வார்டுகள் அதிகமாகி வருகின்றன. டிசம்பரின் ...
கோவை: வெளிநாட்டில் இருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:- கொரோனா தொற்று மீண்டும் சீனா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் ...
கோவை அருகே உள்ள வேடப்பட்டி, பெருமாள் நாயுடு லேஅவுட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 62) சமையல் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள நரசாம்பதி குளம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று கால் தவறி குளத்துக்குள் விழுந்தார். நீரில் மூழ்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து செல்வபுரம் போலீசில் ...
திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 47) விவசாயி. இவர் நேற்று பொள்ளாச்சி- தாராபுரம் ரோட்டில் தனது புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .சுந்தர கவுண்டனூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் இவரது பைக்கும் மோதிக் கொண்டன. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...













