கோவை: “பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டை, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ...

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை ஆவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.மேலும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கூட இந்த கோதுமை மாவு விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர். இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ...

கோவை நகரில் கடந்த ஆண்டில் ( 20 22) சிறார் பாலியல் பலாத்காரப் பிரிவில் 44 வழக்குகள் பதிவாகின. இதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர் .போக்சோ இதர பிரிவில் 31 வழக்குகள் பதிவானது மொத்தமாக 85 வழக்குகள் பதிவாகின. பெண்களிடம் பாலியல் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 20 21 ஆம் ...

கோவை: சமீபத்தில் விமான பயணத்தின் போது பயணிகள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்கள் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விமானிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் கோவை வந்தபோது கூறியதாவது:- சமீபத்தில் ...

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை தாளத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 55) இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டு பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றிருந்தார் .மாலையில் திரும்பி வந்து பார்ப்பது வீட்டில் ஜன்னல் கதவுகள் ரம்பத்தால் அறுக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில்இருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை .இது குறித்து ...

கோவை: ஷார்ஜா, சீனாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கரோனோ தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கும் ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ...

இந்தோனேஷியாவின் தனிம்பார் தீவு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக சக்தி வாய்ந்த நில நடக்கும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்தோனேசியாவின் துவால் பிராந்தியத்தில் இருந்து தென்மேற்கே 342 ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செல்வபுரம் காலனி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சோமனூரை அடுத்த செல்வபுரம் காலனி பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இதனிடையே மக்கள் அனைவரும் போராட்டம் ...

கோவை கரும்பு கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (வயது 58).கூலித் தொழிலாளி.இவரது மனைவி ரபியா (47). இவர்கள் இருவரும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் சாரமேடு பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம். எங்களது குடும்பத்தில் 4 பேர் மட்டுமே உள்ளோம். இந்த நிலையில் கடந்த ...

கோவை அடுத்த பேரூர் தீத்திபாளையம் விவேகானந்தர் நகரை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனை போலி ...