கோவையில் கடந்த ஆண்டில் மட்டும் 85 போக்சோ வழக்குகள் பதிவு..!

கோவை நகரில் கடந்த ஆண்டில் ( 20 22) சிறார் பாலியல் பலாத்காரப் பிரிவில் 44 வழக்குகள் பதிவாகின. இதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர் .போக்சோ இதர பிரிவில் 31 வழக்குகள் பதிவானது மொத்தமாக 85 வழக்குகள் பதிவாகின. பெண்களிடம் பாலியல் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 20 21 ஆம் ஆண்டில் 55 போகஷோ கற்பழிப்பு வழக்குகளும் 28 போக் சோ இதர வழக்குகளும் பதிவாகி இருந்தன .கடந்த ஆண்டில் பெண்கள் சிறார் கடத்தல் தொடர்பாக 3 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன.பெண்கள் மீதான தாக்குதல் வன்கொடுமை தொடர்பாக 220 வழக்குகள் போடப்பட்டது. கடந்தாண்டில் 20 21 ஆம் ஆண்டில் 135 வழக்கில் மட்டுமே பதிவாகி இருந்தன .ஏறக்குறைய இருமடங்கு அளவிற்கு வழக்குகள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் பெண்கள் விவகாரம் தொடர்பாக மொத்தமாக 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.. வரதட்சணை கொடுமை துன்புறுத்தல் தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. பெண்கள் பிரச்சனைகளை கவனிக்க நகர போலீசாருக்கு முக்கியத்துவ வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மகளிர் காவல் நிலையங்களில் பெண்கள் விவகாரம் தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன .குடும்பப் பிரச்சினை கள்ளக்காதல், காதல் விவகார கடத்தல் இளம் பெண்கள் மாயமாவது தொடர்பாக புகார்கள் அதிகமாகி வருகிறது .பெண்கள் விவகாரத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தர விட்டுள்ளார். கடந்தாண்டில் பெண்கள் பிரச்சனைகளில் பதிவான அனைத்து வழக்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது..