சீனாவில் 90 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிப்பு-ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

சீனாவின் 3வது அதிக மக்கள்தொகை கொண்ட ஹெனான் மாகாணத்தில், 90 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருவதாக அவர் கூறினார்.

ஹெனான் மாகாணத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையான 99.4 மில்லியன் மக்களில் சுமார் 88.5 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 வாரங்களில் தொற்று அதிகரித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.