இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தமைக்காக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்பட இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டமைக்காக கனடா நாட்டுக்குள் இவர்கள் 4 பேரும் நுழையத் ...

சென்னை : தி.மு.க., அரசை எதிர்த்து, தொடர் போராட்டங்களை ‘ஜாக்டோ – ஜியோ’ அறிவித்துள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கைகள், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம் பெற்றன. தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தி.மு.க., ஆட்சி வந்ததும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர். பழைய ...

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் பற்றிய அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய செயற்கை கோள்களின் ஆயுள் முடிந்து விட்டது. அதன் எடை 2450 கிலோ. ஜனவரி 15ஆம் தேதி அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் பூமியில் விழும் என்று நாசா தெரிவித்துள்ளது. சுற்று பாதையில் இருந்து ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார்.நேற்று கோவை புறநகர் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடத்தினார்கள். அப்போது சூலூர் அரசூர் பிரிவு அருகே கஞ்சா விற்றதாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷாம்பு (வயது 38) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதே போல துடியலூர் அருகே ...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆழுர் மற்றும் கோட்டயம் பகுதியில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திடீரென கோழி இறப்பு அதிகளவில் இருந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு ...

கோவை மாநகராட்சியில் புகையில்லா போகியை கொண்டாடும் வகையில் 30 இடங்களில் இன்று முதல் குப்பைகள் சேகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- போகி பண்டிகையை முன்னிட்டு, புகையில்லா போகியை கடைப்பிடிக்கும் வகையிலும் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருள்களை தீ வைத்து எரிப்பதைத் தவிா்ப்பதற்காக, மாநகராட்சியில் ...

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவு அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக உறைபனி தாக்கம் தொடங்கும். குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு ஏற்படும். ஆனால், கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் ...

சீனாவின் 3வது அதிக மக்கள்தொகை கொண்ட ஹெனான் மாகாணத்தில், 90 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருவதாக அவர் கூறினார். ஹெனான் மாகாணத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையான 99.4 மில்லியன் மக்களில் சுமார் 88.5 மில்லியன் மக்கள் கொரோனா ...

லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் சார்பில் முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்ததால், அந்த நாட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரிட்டன் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் முதன்முறையாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்காக, ‘விர்ஜின் ஆர்பிட்’ நிறுவனம் சார்பில் ...

தேவராஜன் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் வாரிசு துணிவு படங்களுக்கான சிறப்பு காட்சிகள் காலை நான்கு மணி, ஐந்து மணிக்கு திரையிடப்படுகின்றது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் ...