கோவை சாய்பாபா காலனி பக்கம் உள்ள தடாகம் ரோடு கோயில்மேடு சந்திப்பில் டாஸ்மாக் கடை ( என் 1602) உள்ளது. இந்த கடையின் முன் நேற்றிரவு ஒரு ஆண் பிணம் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு இறந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.. இது குறித்து கடை சூப்பர்வைசர் கண்ணன் சாய்பாபா காலனி போலீசில் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கீரணத்தம் வேலாயுத நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் அஜய் ( வயது 15) இடிகரை, தெற்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கவுரி ஈஸ்வரன் (வயது 15) இவர்கள் இருவரும் இடிகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் பள்ளிக்கூட வளாகத்தில் ...
நீலகிரியில் உள்ள கவர்னர் சோலை, பார்சன்ஸ் வேலியில் உள்ள வனப்பகுதிகளில் இன்று திடீரென தீப்பற்றியது. இந்த காட்டுத் தீ வேகமாக பரவி காய்ந்த செடி கொடிகள், மரங்கள் பற்றி எரிந்தன. நகரின் முக்கிய பகுதிகள் அருகே உள்ள குப்பை குழி பகுதியிலும் தீ பரவியது. இதனால் மின்விநியோகம் தடைப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் ...
மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் குழப்பத்தில் அழுத்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புராண கதைகளில் வரும் மர்மான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கிளையுடன் கூடிய ஒரு மரத்தில் வெள்ளை நிறத்தில் முடியை ...
சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு(IMA) சுற்றிக்கை ...
தைவானை அச்சுறுத்துவதற்காக 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பியதாக தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் அதிகாரபூர்வமான தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் கூட சீனாவின் செயல்கள் தைவானை சொந்தம் கொண்டாடும் நோக்கத்திலேயே உள்ளது. அமெரிக்காவுடன் தைவான் நெருக்கமாக இருப்பது சீனாவை கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தைவானை அச்சுறுத்தும் வகையில் ...
ராமேஸ்வரம்: கடந்த 109 ஆண்டுகளாக இயங்கி வந்த பாம்பன் ரயில் பாலம் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, புயல் என பல்வேறு இயற்கை சீற்றங்களை சந்தித்த பாம்பன் பாலம் வலுவிழந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1913 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலத்தின் கட்டுமானம் ...
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இது பண வீக்கத்திற்கு காரணமாக அமைந்தது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதத்தில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல், ...
கடலுார் : ‘இந்த ஆண்டு, மே மாதம் வரை, இயல்பை விட அதிக வெயில் இருக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.கடலுார் தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பருவ நிலை மற்றும் கால நிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ...
தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது, மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கக் கோரியது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டித்தது குறித்து மின்சார வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் ...













