கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம், எம்.ஜி..ஆர் நகர் சேர்ந்தவர் துரைசாமி (வயது 40 )இவர் நேற்று தனது உறவினர் ரவிக்குமார் என்பவருடன் காரில் அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தினார்.இதனால் அவரால் நிற்க முடியவில்லை.இந்த நிலையில் துரைசாமியை ரவிக்குமார் காரில் ஏற்றிக் கொண்டு அவரது வீட்டுக்கு ...
கோவை மாவட்டம் வால்பாறை வாழைத் தோட்டப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் பழைமையான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அப்பகுதி பொதுமக்கள் அந்த கிணற்றிலிருந்து தங்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் தற்போது கிணற்றின் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயிலிருந்து கழிவுநீர் கசிந்து கிணற்றில் ...
புதுடெல்லி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டதற்கு இந்தியாவே காரணம் என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாள்தோறும் பல மணி ...
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். விடுமுறை நாட்களில் அவ்வப்போது இங்கு வந்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ...
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 52) சென்ட்ரிங் தொழிலாளி .நேற்று இவரும் சவுரிபாளையம் பிரிவு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபிராஜ் ( வயது 38 |என்பவரும் ஒண்டிப்புதூர் கிருஷ்ணா நகரில் செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான வீட்டில் சென்ட்ரிங் பலகை பிரிக்கும் வேலை செய்து கொண்டிருந்தனர். 3-வது மாடியில் சென்ட்ரிங் பலகையை ...
1000 கிலோ எடையுள்ள பழைய செயற்கைக்கோளை பசிபிக் பெருங்கடலில் வீழ்த்தியது இஸ்ரோ. Megha-Tropiques-1 என்ற செயற்கைகோள் உலகளாவிய கால நிலை மாற்றங்களை சேகரித்து அனுப்புவதற்காக இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றால் ஒரு கூட்டுப் பணியாக உருவாக்கப்பட்டது. பெங்களூரில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் ...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று 08.03.23 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் தனி சிறைகள்,பெண்கள் தனி கிளைச்சிறைகள் மற்றும் பெண்கள் கிளை சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் சிறைவாசிகள் உலக மகளிர் தினத்தை கொண்டாடினர். பெண் சிறைவாசிகளுக்கென அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் ஆகியவை ...
இரண்டு நாடுகளுக்கு இடையில் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் இடிக்கிறது. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டில் கடந்து விட்ட நிலையில், இன்னும் போர் உக்கிரம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் இரண்டு நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் கடுமையாக தங்களுக்குள் மோதிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இந்த ...
இந்தோனேசியாவில் கன மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட இருவேறு நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் நட்டுனா ரீஜென்சி பகுதி கிராமங்களிலேயே குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மாயமாகியுள்ள 42 பேர்களுக்காக தீவிரமாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜென்டிங் மற்றும் பங்கலான் கிராமங்களில் டசின் கணக்கான இராணுவ வீரர்கள், பொலிசார் மற்றும் தன்னார்வலர்கள் ...
மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள ஓடந்துறை பவானி ஆறு பகுதியில் நேற்று ஒருவர் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். ...













