வால்பாறை கிணற்றில் கலக்கும் கழிவுநீர் – நகர்மன்ற துணைத் தலைவர் நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் வால்பாறை வாழைத் தோட்டப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் பழைமையான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அப்பகுதி பொதுமக்கள் அந்த கிணற்றிலிருந்து தங்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் தற்போது கிணற்றின் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயிலிருந்து கழிவுநீர் கசிந்து கிணற்றில் உள்ள குடிநீரில் கலப்பதால் கிணற்று நீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் பெரும் வேதனையடைந்து வருவதாக நகராட்சி நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற நகர் மன்ற துணைத் தலைவர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்க்கொள்வதாக உறுதியளித்துள்ளார்..