தீவிரமடையும் போர்… உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா- இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் கடும் சண்டை..!

ரண்டு நாடுகளுக்கு இடையில் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் இடிக்கிறது. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டில் கடந்து விட்ட நிலையில், இன்னும் போர் உக்கிரம் குறைந்ததாக தெரியவில்லை.

நாளுக்கு நாள் இரண்டு நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் கடுமையாக தங்களுக்குள் மோதிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள நகரை கைப்பற்றிய, ரஷ்யா கடந்த சில மாதங்களாகவே கடுமையாக சண்டையிட்டு வருகிறது. அந்த நகரை நாலா புறமும் சுற்றி வளர்த்து தொடர்ந்து தாக்குதல்களும் நடத்தி வந்த நிலையில் பக்முத் நகருக்குள் ரஷ்ய ராணுவம் புகுந்து விட்டது. அவரை அவர்கள் நகரத்தை கைப்பற்றும் நினைப்பில் உக்ரைன் வீரர்களுடன் விதிகளில் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகிறார்கள்.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இடைவிடாத தாக்குதல்களினால் பக்முத் நகரம் நிலை குலைந்து விட்டது. அந்தப் பகுதியில் வசித்து வந்த 4,000 இடத்திற்கும் மேற்பட்ட நகரவாசிகள் தற்பொழுது மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பாதுகாப்பு முகாம்களில் தங்களுடைய வாழ்க்கையை கழித்து வருகிறார்கள். தாக்குதல்கள் தீவிரமாக இருப்பதாலும் ஆனால் ரஷ்யா படைகளின் கைகளுக்குள் உக்ரைன் செல்லவில்லை என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.