காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ...

சமூக வலைதளங்களில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அல்லது ஆச்சரியப்படுத்தும் பல தகவல்களை காணலாம். விலங்குகள் குறிப்பாக பாம்புகள் தாக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் கவனம் பெற்று வருகிறது. பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். ஆனால், சில வீடியோக்களில் காணப்படும் காட்சிகள் நம்பவே முடியாததாக இருக்கும். சமூக ...

வாஷிங்டன்: இலங்கை கடந்த ஆண்டு முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன. மேலும் கடனுதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்தையும் இலங்கை அரசு அணுகியது. இது தொடர்பாக இலங்கை அரசுடன் சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து சர்வதேச ...

கடந்த 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய பாதிப்புகளில் வெறும் 5 மாநிலங்கள் இருந்து மட்டும் 75% க்கும் அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ...

கோவை சூலூர் பக்கம் சேலம்- பாலக்காடு பைபாஸ் ரோட்டில் வெங்கிட்டாபுரம் சந்திப்பு அருகே நேற்று பயணிகள் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசி ( வயது 51) படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ஆட்டோவில் பயணம் ...

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு மொக்டோ (வயது 23) இவர் நெகமம், கள்ளிப்பட்டியில் உள்ள ஒரு கயிறு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பல்லடம் -பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கருமாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார் ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கம் உள்ள பூதாககுடியை சேர்ந்தவர் அடைக்கண் . இவரது மகன் வடிவேல் (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று சூலூர் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள செஞ்சேரி பரியல் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஆழமான ...

கோவை மத்திய சிறையில் ஏராளமான விசாரணை, கைதிகள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கைதிகளை சந்திக்க அவர்கள் உறவினர்கள் நண்பர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் நபர்களின் முகவரிகள் போலியாக கொடுத்து சிறையில் உள்ள கைதிகளை சந்திப்பதாக தெரியவந்து உள்ளது. எனவே கைதிகளை சந்திக்க வரும் நபர்களின் முகவரியை உறுதி செய்யும்படி சிறைத் துறைக்கு கோவை ...

கோவை: மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள, தேக்கம்பட்டி வெல்ஸ் புரம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மகன் மிதுன் (வயது 20) இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்கள் சந்துரு, நிதின் குமார் ஆகியோருடன் பைக்கில் கணுவாய் பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சந்துரு ஓட்டினார். இவர்கள் இருவரும் ...

கோவை சரவணம்பட்டி கீரணத்தம் ரோட்டில் உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் நாராயணசாமி . இவரது மகன் தனுஸ்ரீ (வயது 21)இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம் .எஸ். சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .முன்னதாக இவரது வீட்டின் மேஜை ...