ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து : டிரைவர் பலி – பயணி படுகாயம்..!

கோவை சூலூர் பக்கம் சேலம்- பாலக்காடு பைபாஸ் ரோட்டில் வெங்கிட்டாபுரம் சந்திப்பு அருகே நேற்று பயணிகள் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசி ( வயது 51) படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ஆட்டோவில் பயணம் செய்த சேலத்தைச் சேர்ந்த இமாம் வழுதி (வயது 52)தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற 4 சக்கர வாகனத்தை தேடி வருகிறார்..