கோவை மத்திய சிறையில் போலி முகவரிகளை கொடுத்து கைதிகளை சந்திக்கும் நபர்கள்-மாநகர போலீசார் சிறைத்துறைக்கு கடிதம்..!

கோவை மத்திய சிறையில் ஏராளமான விசாரணை, கைதிகள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கைதிகளை சந்திக்க அவர்கள் உறவினர்கள் நண்பர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் நபர்களின் முகவரிகள் போலியாக கொடுத்து சிறையில் உள்ள கைதிகளை சந்திப்பதாக தெரியவந்து உள்ளது. எனவே கைதிகளை சந்திக்க வரும் நபர்களின் முகவரியை உறுதி செய்யும்படி சிறைத் துறைக்கு கோவை மாநகர போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கூறும்போது..

கோவை சிறையில் உள்ள காமராஜபுரம் கௌதம் உள்பட சில முக்கிய கைதிகளை சந்தித்த நபர்களின் விபரங்களை எங்களது காவல் குழு சரி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் முக்கிய கைதிகள் ரவுடிகளை சந்திக்க வரும் நபர்களின் முகவரிகளை சரிபார்க்கவும் அவர்கள் குறித்து ஆவணங்களை சேகரித்து வைக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. சிறையில் இருக்கும் காமராஜபுரம் கெளதமே சந்திக்க வந்த நவீன் குமார் என்பவரை கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்து உள்ளோம். அவரின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் அதில் அவர்கள் வாட்ஸ் அப் குழுவில் அமைத்து செயல்படுத்தும் அங்கு குழுவில் 10 பேர் இருந்தது தெரியவந்தது. அவர்களை பெயர் விபரங்களை உள்ளிட்டவற்றை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.