பைக் விபத்து: வடமாநில தொழிலாளி பலி..

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு மொக்டோ (வயது 23) இவர் நெகமம், கள்ளிப்பட்டியில் உள்ள ஒரு கயிறு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பல்லடம் -பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கருமாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார் . இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் . அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார் .இதுகுறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..