குட்டையில் மீன் பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி..

கோவை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கம் உள்ள பூதாககுடியை சேர்ந்தவர் அடைக்கண் . இவரது மகன் வடிவேல் (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று சூலூர் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள செஞ்சேரி பரியல் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் தண்ணீரில் மூழ்கி இறந்தார் .இது குறித்து இவரது மனைவி கவுசல்யா சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.தீயணைப்பு படையினர் பிணத்தை மீட்டனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.