கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகர காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த பணிகள் செய்துவருகிறார் நகரில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படாத வகையில் பல இடங்களில் “யூடேன்” ,ரவுண்டானா, அமைத்துள்ளார்.ரவுடி அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதனால் கடந்த ஆண்டில் ...

காக்கிச்சட்டை கடவுள் கொடுத்த வரம், காக்கிகளின் கண்ணியம் காக்க பொதுமக்களை அழைக்கிறது ஆணையம். இது சம்பந்தமாக கோவையைச்சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான சங்கரமூர்த்தி கூறியதாவது; போலீஸ் என்றாலே பொதுமக்களிடையே ஒருவித வெறுப்பு சலிப்பு இயல்பாக ஏற்படுகிறது அதற்கு காரணம் ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கில் உள்ளது. ஆனால் உண்மையிலேயே லஞ்சம் ஊழல் அயோக்கியத்தனம் இவைகளில் முன்னணியில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வசூல் செய்யப்பட்டு ஐக்கிய ஜமாத் பேரவை சார்பாக சுமார் 8 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களைதூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலுக்கு கொன்று சென்று அங்கு பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகள் ...

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரிசெய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மேற்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூ,ர் .ஈரோடு, சேலம், நாமக்கல், , தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. இதில் கோவை, சேலம் என்று 2 சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சரங்களுக்கும் தலா ஒரு டி.ஐ.ஜி. உள்ளனர். இந்த மேற்கு மண்டலத்துக்கு ...

செங்குன்றம் போக்குவரத்து காவல் சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் தலைமையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ...

சா்க்கரை, வெல்லம் தயாரிக்கப் பயன்படும் ஆலைகளுக்காகவும், பொங்கல் பண்டிகை மற்றும் கோயில் வழிபாடுகளுக்காகவும் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு பயன்படுத்துவதோடு, கோயில் திருவிழாக்களில் சாமிக்கு வைத்து வழிபடுவதற்கும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன்தேவை குறைவுதான் என்பதால் குறைந்த பரப்பில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்படும். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் ...

பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறும் பெண்கள் தங்கள் மறைவுக்கு பிறகு ஓய்வூதியத்தை பெறும் வாரிசுதாரர் நியமனத்தில் கணவருக்குப் பதிலாக குழந்தைகள் பெயரைச் சேர்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மத்திய குடிமைப் பணி விதிகள் திருத்தம் செய்யப்பட்ட அறிவிப்பு நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, பெண் அரசு ஊழியர்கள் மறைவுக்குப்பின் ...

ஜப்பான், சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதன் காரணமாகக் கடந்த 3 நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை முதல் ராமேஸ்வரம் ...

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தையடுத்து நிறுவனம் தமிழ்நாடு அரசால் மூடப்பட்டது. இந்நிலையில், ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜன.2) மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த மாதம் 4-வது வாரத்தில் ...

முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ...