கோவை மேற்கு மண்டலத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டில் சாலை விபத்தில் 4,234 பேர் சாவு.  பலிஎண்ணிக்கை குறைந்தது..ஐ.ஜி. பவானீஸ்வரி பேட்டி..

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரிசெய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மேற்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூ,ர் .ஈரோடு, சேலம், நாமக்கல், , தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. இதில் கோவை, சேலம் என்று 2 சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சரங்களுக்கும் தலா ஒரு டி.ஐ.ஜி. உள்ளனர். இந்த மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்..மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மொத்தம் 240 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையம் உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்கள், விபத்துக்கள், உள்ளிட்டவற்றை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அதன்படி 20 22 ஆம் ஆண்டில் திருட்டு, ஆதாய கொலைகள் என 2,762 வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் கடந்த ஆண்டில் 2,441 வழக்குகள் தான் பதிவாகியுள்ளது.. அதேபோன்று கொலை,கொலை முயற்சி அடிதடி உட்பட வழக்குகள் 20 22 ஆம் ஆண்டில் 5,128வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் அது கடந்த ஆண்டில் 4,303 ஆககுறைந்துள்ளது. போக்சோ வழக்குகளும் கடந்த ஆண்டை விட 226 வழக்குகள் குறைந்துள்ளது. அத்துடன் கடந்தாண்டில் 131 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது2022 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் 4,324 பேர் பலியாகி உள்ளனர் .ஆனால் கடந்த ஆண்டில் ( 2023) மொத்தம் 4,234
பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் குற்றவாளிகளை எளிதில் கண்காணிக்கவும் குற்ற சம்பவங்கள் நடைபெறாது தடுக்கவும் கிராமங்கள் தோறும் கிராம விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது அதன்படி மேற்கு மண்டலத்தில் இதுவரை 4,344 கிராம விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோவை மேற்கு மண்டலத்தில் , 5578 தனி மற்றும் பண்ணை வீடுகளை கணக்கெடுக்கப்பட்டு அங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது இதில் அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது .இவர் அவர் கூறினார்.