கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று அனைத்து ஆலயங்களிலும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது . அதேபோல தொழிற்சாலைகள்,நிறுவனங்கள், அலுவலகங்கள்,வணிக நிறுவனங்கள், வாகன பணிமனைகள் மற்றும் வாகனங்களுக்கும் ஆயூத பூஜை பக்திப் பரவசத்தோடு நடைபெறுகிறது . இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக பெருமான் ...

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நேற்று துபாயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட இந்துக் கோயில் இந்த கோவில் ஜெபல் அலி வழிபாட்டு கிராமத்தில் அமைந்துள்ளது, இது பல்வேறு நம்பிக்கைகளின் 9 மத கோவில்களை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட குருத்வாராவை ஒட்டி இந்த புதிய இந்துக் கோயில் அமைந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சகிப்புத்தன்மை மற்றும் நல் ...

கோவை ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி.. விஜயதசமி தினமான இன்று கோவை மாவட்டம் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கல்விப் பணியினை தொடங்கினர். விஜயதசமி தினமான இன்று கல்வி பணியை துவங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது ...

புதிய மைல் கல்: படையலிட்டு ஆயுத பூஜை வழிபாடு நடத்திய கோவை கிராம மக்கள்… கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவபட்டியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் புதிய மைல் கல் நட்டு வைத்தனர். அதில் சிறுவாணி 20 கிலோ மீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சினிமா பட பாணியில் அந்த ...

 மகாளய அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்காவிரி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சதுரகிரியில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இது பிதுர்கர்மா செய்ய உகந்த நாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் ...

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமி விக்கிரகங்கள் நேற்று ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றன. வரும் 26-ம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் குமரி மாவட்டத்திலிருந்து செல்லும் சுவாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்தில் பத்து நாள்கள் பூஜைக்காக வைக்கப்படும். ...

புரட்டாசி மாதத்தையொட்டி, வைணவ கோயில்களுக்கு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி, வைணவ கோயில்களுக்கு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி, சுற்றுலா வாகனங்களை சென்னையிலிருந்து ...

சென்னை பூக்கடையில் உள்ள கேசவ பெருமாள் கோவிலில், இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க இருக்கிறது. திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணி யானைக்கவுனி தாண்டுகிறது. யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது பக்தர்களால் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன் படி நேற்று மருதமலை கோவிலில் ...

திருப்பதி திருமலையில் தொலைபேசி மூலமாக பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தான தலைமைச் செயல் அலுவலர் சுப்பா ரெட்டி கலந்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 லட்சத்து 22 ஆயிரம் பேர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறினார். இதுவரை இல்லாத ...