டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மதுக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை (ஈ.டி.) வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு ...

வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் ...

சென்னை: மக்களவை தேர்தலின் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெப்பஅலை வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்ததால், பொதுமக்கள் காலை 6.30 மணிக்கே அதிகளவில் வந்து, வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இது வாக்குப்பதிவு சதவீதத்தில் பிரதிபலித்தது. ...

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. முதல் கட்டமாக தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை ...

கோவை: கோவை பி.என்.புதுாரில் உள்ள ஓட்டுச்சாவடி அருகே, 200 மீட்டருக்கு அப்பால் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், ‘கூட்டம் கூடக் கூடாது, கட்சி சின்னத்தை வைத்திருக்க கூடாது’ என்று கூறியுள்ளனர். கட்சி சின்னத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்ற ...

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடை பெற்றது. இன்று காலை முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்த நிலையில், மாலை 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. இன்று தேர்தலில் பல சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், திருச்சியில் முதல்முறையாக இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இருக்கும் பெண் ...

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக, 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தலில் 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ...

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேனேஜர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 ...

கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை ,நீலகிரி. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டல எல்லைக்குள் 9 நாடாளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது .மேற்கு ...

கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 31 லட்சத்து 14 ஆயிரத்து 118 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 2,018 இடங்களில் 396 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் ஒரு ...