கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 20,500 போலீசார் நியமனம் – ஐ.ஜி. பவானீஸ்வரி தகவல்..!

கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை ,நீலகிரி. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டல எல்லைக்குள் 9 நாடாளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது .மேற்கு மண்டல மாவட்டங்களில் 20,500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் . இதில் 6.200 போலீசார் ஜார்க்கண்ட், குஜராத் ஆந்திரா,, கேரளா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ஆயுத படை, ஊர் காவல் படை, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டு சாவடிக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களிலும், ஒட்டு சாவடிகளிலும் போலீசார் பணியில் உள்ளனர் .தேர்தல் பாதுகாப்பையொட்டி தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மண்டல அளவில் 1.419 பதற்றமான ஓட்டு சாவடிகள் உள்ளது. சாதி ரீதியிலான பதற்றமான 267 ஓட்டுச்சாவடிகளும், மதரீதியான பதற்றமான 47 ஓட்டு சாவடிகளும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பதற்றமான பகுதியில் 13 ஓட்டு சாவடிகளும், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடமாட்டம் என சந்தேகமுள்ள பகுதிகளில் 37 ஓட்டு சாவடிகளும், சட்ட ஒழுங்கு பதற்றமான பகுதியில் 1055 ஓட்டு சாவடிகளும் அமைந்துள்ளது. தேர்தல் பணிக்காக வந்த வெளியூர்க்காரர்கள் கட்டாயம் உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போலீஸ் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதியில் வெளியூர்க்காரர்கள் தங்கி உள்ள விவரங்களை சேகரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.