சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் இன்று (மார்ச் 21) நேரில் ஆஜராகினர். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ...

தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் கோயில் நிலங்களை மீட்க இந்து முன்னணி உதவும் என மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்து முன்னணியின் கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் நீண்ட ...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் இந்தியாவின் நிலைப்பாடை குவாட் நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி போரை உடனடியாக நிறுத்த தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதற்கு எந்த நாடும் வருத்தம் தெரிவிக்காது என ஆஸ்திரேலியா தெரிவித்து இருக்கிறது. ரஷ்யாவின் போர் நடவடிக்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ...

சென்னை: காவிரி நீரானது டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மூலம் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்ப்பு காணப்பட்டது. காவிரியில் எந்தவொரு திட்டத்திற்கும், கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேகதாது அணை ...

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ...

மதுரை: தாலிக்கு தங்கம் திட்டம்தான் உயர் கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டமாக மாற்றப்பட்டுள்ளது என்று மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாநகராட்சி வெள்ளிவீதியார் ...

சென்னை : சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.மறைந்த முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் மருத்துவமனை கட்டப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதற்காக ...

கோவையில் உதயநிதி ஸ்டாலின் : தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 524 பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் என ரூ.52,40,000 மற்றும் 500 மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் ...

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.அந்த வகையில்,முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்தின் மூலம் 3,000 பம்பு செட்டுகள் 70 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,செல்போன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து பம்பு ...

கர்நாடக நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மற்றும் மோடியையும் தவறாக பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கைது செய்யப்பட்டார். ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என்று கூறி மாணவிகளின் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ...